×

75 ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிந்து விட்டது: காங்கிரஸ் எம்பி ஆவேசம்

மோடி அரசு நிர்வாகத்தின் கீழ் பொருளாதாரம் தவறான திசையில் சென்று விட்டது என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா மக்களவையில் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ இந்திய ரூபாயின் மதிப்பு 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலவீனமான நிலைக்கு சரிந்துள்ளது. நிதியமைச்சரே, உங்கள் அறிக்கையைப் படித்தேன், அதில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை; உயர்ந்தது டாலர்தான் என்று கூறியிருக்கிறீர்கள். இது இரண்டு மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டதாகவும், தோற்றவரின் தந்தை தனது மகன் தோற்கவில்லை. மகனுக்கு எதிராக போட்டியிட்டவர் வலிமையானவர் என்றும் கூறுவது போலாகும். அதே போல் தான் நமது ரூபாய் ஆசியாவில் மோசமாகச் செயல்படும் நாணயம் ஆகிவிட்டது. அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையால் நாடு 78 ஆண்டுகால மோசமான சாதனையை எட்டியுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபரில் மட்டும், நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.4 லட்சம் கோடியை தொட்டது. இது ஒரு வரலாற்று உச்சம். ஒரு சதவீத பணக்கார குடிமக்கள் இப்போது நாட்டின் செல்வத்தில் 40 சதவீதத்தையும் தேசிய வருமானத்தில் 65 சதவீதத்தையும் வைத்திருக்கிறார்கள். இது வெறும் 78 ஆண்டுகால சாதனை அல்ல. இது 100 ஆண்டுகால சாதனை. கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருந்தாலும், இவை கார்ப்பரேட் கடன் தள்ளுபடிகள் ஆகும். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாங்கள் ரூ.78,000 கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம்.

முக்கிய தொழில்களில் ஏகபோகங்கள் மற்றும் இரண்டு நிறுவன அதிகாரத்தை அரசாங்கம் வளர்க்கிறது. இதுபோன்ற அதிகாரக் குவிப்பு இந்தியாவில் இதற்கு முன் பார்த்ததில்லை. விமானப் போக்குவரத்துத் துறையில் அறுபத்தைந்து சதவீதம் இண்டிகோ நிறுவனத்திடமும், 26 சதவீதம் ஏர் இந்தியா நிறுவனத்திடமும் உள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து கட்டணங்களைத் தீர்மானித்தால், பயணிகளுக்கு வேறு வழியில்லை. அமெரிக்காவில் இதை தடுக்க சட்டங்கள் உள்ளன. நம் நாட்டில், எதுவும் இல்லை’ என்றார்.

Tags : Congress ,Deepender Singh Hooda ,Lok Sabha ,Modi government ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...