எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என வெளியான செய்திக்கான மறுப்பறிக்கை

சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி புதிய கட்டிடமானது தரை மற்றும் 10 தளங்களுடன் மின்தூக்கி வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் 14.04.2025 அன்று மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக திறக்கப்பட்டு 484 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு தளங்களிலும் 48 மாணவர்களுக்கு 7 கழிப்பறைகள், 7 குளியலறைகள். 6 சிறுநீர் கழிக்கும் இடம் மற்றும் 5 கைகழுவும் தொட்டி என விடுதியின் கட்டமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் நூலகம் அமைக்கப்பட்டு மாணாக்கர்கள் போட்டி தேர்விற்கு படிக்கும் பொருட்டு போட்டித் தேர்வு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் தினசரி நாளிதழ்கள் மாத இதழ்கள் மற்றும் வருட புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பொதுவான புத்தகங்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

பல்திறன் கூடம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது மேலும் ஐந்து கணினிகள் மாணாக்கர் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Do Labs என்ற நிகழ்ச்சி மூலமாக மாணாக்கர்களின் தனிதிறமையை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கப்பட்டு அதில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் Internship வழங்கப்பட்டு வருகிறது.

புதிய கட்டிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் கழகம் (TEXCO) மூலம் காப்பாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் (Care Taker) நியமனம் செய்யப்பட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

மேலும் புதிய கட்டத்தை பராமரிப்பதற்காக மற்றும் பாதுகாப்பிற்காக வெளிமுகமை மூலமாக வருடத்திற்கு ரூபாய் 70 இலட்சம் ஒதுக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள், மற்றும் இதா பணியாளர்கள் நியமனம் செய்து செயல்பட்டுவருகிறது. மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணாக்கர்களின் வருகைப் பதிவினை உறுதி செய்வதற்கு பூம்கேட் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் செயல்படும் 20 சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் சுமார் 2900 மாணாக்கர்களுக்கு தரமான உணவு வழங்கும் பொருட்டு ஒருங்கிணைந்த சமையற்கூடம் திட்டத்தின் உணவு வழங்க வெளிமுகமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணாக்கர்களுக்கான வழங்கப்படும் உணவு உரிய நேரத்தில் வழங்கபடுகிறதா, தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை மாணாக்கர்கள் துறைக்கு தெரியப்படுத்தும் பொருட்டு அமுதசுரபி செயலி உருவாக்கப்பட்டு அதில் மாணவர்களின் கருத்து விடுதி காப்பாளர்கள் மூலம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. விடுதியின் மாணாக்கர்களில் ஒருவரை தலைமையாக கொண்டு மெஸ் கமிட்டி உருவாக்கப்பட்டு உணவின் தரம் அவ்வபோது WhatsApp குழு மூலம் பகிரப்பட்டு வருகிறது.

அரசாணையில் கொடுக்கப்பட்டுள்ள அப்போது நடைமுறையில் இருந்த உணவு பட்டியலின் அடிப்படையில் 01.01.2024 முதல் நல்ல முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாண்டுகள் முடிவுற்ற நிலையில் மேற்படி நிறுவனத்திற்கான ஒப்பந்தம் முடிவுறும் நிலையில் உள்ளது எனவே, புதிய ஒப்பந்த புள்ளிகள் கோரும் போது தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய உணவு பட்டியலின்படி மாணாக்கர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு உணவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

20 சமூக நீதி விடுதிகளில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் மூலம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் வேறு எந்த விடுதிகளிலும் வராத புகார்கள் இந்த விடுதியில் மட்டும் மாணவர் அல்லாத ஒரு சில வெளிநபர்களின் தூண்டுதல்களின் காரணமாக விடுதியில் மாணவர் போராட்டம் என்ற பெயரில் தவறான தகவல்கள் ஊடகங்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. எம்.சி.ராஜா புதிய மாணவர் விடுதி மற்றும் பழைய மாணவர் விடுதி ஆகியவற்றில் போதிய வசதியுடன் மாணவர்கள் தங்கியுள்ளனர் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: