காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த செம்மல் கடந்த செப்டம்பரில் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்டது. தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து டிஎஸ்பியை கைது செய்ய நீதிபதி செம்மல் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை இல்லை எனக் கூறி டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். நீதிபதிக்கும் அவரது பாதுகாப்பு அதிகாரிக்குமான பிரச்சினையால் கைது உத்தரவு என காவல் துறை வழக்கு தொடர்ந்தது. டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். டிஎஸ்பியை கைது செய்ய நீதிபதி செம்மல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தனிப்பட்ட விரோதத்தில் உத்தரவு பிறப்பித்த புகாரில் விசாரணை முடிந்த நிலையில், செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரணைக்குப்பின் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: