டெல்லி: ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை தர முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்ட பான் கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ் ஆகியற்றை ஆதார் பெயர் மாற்ற ஆவணமாக இணைக்கலாம். புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் இணைக்கலாம் என அறிவித்துள்ளது.
