×

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கம்: தமிழ்நாடு அரசு

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது 35 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகள், 38 கிராம ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டன. குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4 கிராம ஊராட்சிகள் 11 கிராம ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டன. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 7 கிராம ஊராட்சிகள் 19 கிராம ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டன.

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் 20 கிராம ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளன. இதன்படி மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags : Nilgiri district ,Government of Tamil Nadu ,Chennai ,Neelgiri ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம...