- ஸ்டாலின்
- கல்லக்குடி
- Lalkudi
- தெலசூர்
- மல்வாய்
- ஒரத்தூர்
- சரதமங்கலம்
- முதுவத்தூர்
- கல்லகம்
- அடலரசூர்
- எம்கனநூர்
- வரகுபா
- தபாய்
- வடுகர் வரைபடம்
- அரோகிபுரம்
- காமராஜபுரம்
- உட்பட
- தமிழ்
- டல்மியா உயர்நிலைப்பள்ளி வளாகம்
லால்குடி, டிச.7: திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் மேலரசூர், மால்வாய், ஒரத்தூர், சரடமங்கலம், முதுவத்தூர், கல்லகம், கீழரசூர், எம்கண்ணணூர், வரகுப்பை, தாப்பாய், வடுகர் பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் டால்மியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட சுகாதாரநல அலுவலர் ஹேமசந்த்காந்தி, கல்லக்குடி பேரூராட்சித் தலைவர் பால்துரை, டால்மியா துணை பொது மேலாளர் சுப்பையா, மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் லால்குடி சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவ உதவிகள் வழங்கினார்.மருத்துவர் ஜோஸ்பின் தலைமையிலான மருத்துவ குழுவினரின் 17 மருத்துவத் துறை சார்ந்த பரிசோதனை சிகிச்சை முகாம்களை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கிராமப்புற பகுதியிலிருந்து அதிக மக்கள் வருவதால் அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் உதவிடுமாறு அறிவுறுத்தினார்.
