சோனியா காந்தி பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தியாகம், தன்னலமற்ற பொதுவாழ்வு பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும் உறுதியைப் பிரதிபலிப்பதாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது. முற்போக்கான, அனைவருக்குமான இந்தியாவை நோக்கிய நமது கூட்டு முயற்சிகளுக்கு அவரது கொள்கை பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுவூட்ட வேண்டும் என விழைகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: