செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தர் கே.ஏ.காளியப்பன். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் ஆவார். இவர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தார். கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் கடந்த 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்து, சுற்றுச்சூழல் பிரிவில் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில், அவர் நேற்று பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். கே.கே.செல்வம் உடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். மாவட்ட பொருப்பாளர் ஏ.கே.செல்வராஜ் உடன் இருந்தார். கோபிச்செட்டிப்பாளையம், நம்பியூர் ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமானோரும் கே.கே.செல்வத்துடன் அதிமுகவில் இணைந்தனர்.

Related Stories: