×

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது: டி.டி.வி தினகரன் பேட்டி

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுகவை வீழ்த்துவது கடினம் என்று தான் சொல்வதால் அந்த கூட்டணிக்கு தான் செல்வதாக அர்த்தமில்லை. கூட்டணி பலம், ஆட்சி அதிகாரத்துடன் திமுக வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல பிரச்சினைகள் உள்ளன; என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது என டி.டி.வி தினகரன் கூறினார்.

திமுகவை எதிர்க்கும் காட்சிகள் தங்களது செயல்பாடுகளை திருத்தி கொள்ளாவிட்டால் திமுகவை வீழ்த்துவது கடினம். தவெக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமைந்தால் அதிமுக, பாஜக கூட்டணி 3 வது இடத்துக்கு தள்ளப்படும். திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் 3 வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகவும் என தெரிவித்தார்.

Tags : AIADMK ,BJP alliance ,2026 assembly elections ,TTV ,Dinakaran ,Chennai ,AMMK ,general secretary ,DMK ,
× RELATED கள்ளக்குறிச்சியில் பெற்றோரை...