திருத்துறைப்பூண்டி, டிச. 8: தொழிற்சங்க அங்கீகார தேர்தல் முன்னிட்டு தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக தொமுச பொது செயலாளர் சோம அழகிரி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு பின்னர், பிறகு திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அனைத்து கிடங்குகளிலும் மண்டல துணை தலைவர் (பொது) சுரேஷ்குமார் தலைமையிலும் மண்டல துணைச் செயலாளர் (கொபி) வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் துரை,வீரபத்திரன் மற்றும் தொழிற்சங்க உறுப்பினருடன் 5ம் எண் சின்னத்திற்கு அனைத்து கிடங்கு பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
