×

ராஜஸ்தானில் பயங்கரம் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை: ஒருவர் கைது

ஜெய்பூர்: ராஜஸ்தானில் செவிலியர் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டத்தில் முண்டவார் காவல் நிலையத்துக்கு முன் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் வாடகை வீட்டில் செவிலியர் மாணவி(20 வயது) ஒருவர் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த மாணவியின் உடல் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை, எனது மகள் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முண்டவார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், அரியானா மாநிலம் மகேந்தர்கரை சேர்ந்த உபேந்திர குமார்(21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட உபேந்திர குமார் அந்த மாணவியுடன் அதே வீட்டில் தங்கி இருந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றனர். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் திகாராம் ஜூலி, “ராஜஸ்தானில் பெண்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றங்களை தடுக்காமல் பாஜ கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டுள்ளது” என குற்றம்சாட்டி உள்ளார்.

Tags : Rajasthan ,Jaipur ,Mundawar police ,station ,Khairthal Tijara district ,
× RELATED காஷ்மீரில் கடும் குளிர் அலை: ஷோபியானில் -6.4 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது!