×

ரஷ்ய அதிபர் விருந்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை காங்கிரசில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புடினுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்டதால் சர்ச்சை உருவான நிலையில், காங்கிரசில் இருந்து விலக முடிவா என்று கேள்விக்கு மூத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் பதில் அளித்துள்ளார்.
டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்தில் காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் பங்கேற்றார். இதில் பங்கேற்ற சசி தரூர் மோடி-புடின் இடையேயான நட்பை பாராட்டி பேசியது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருந்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு இல்லாத போது காங்கிரஸ் கட்சி எம்பியான சசி தரூர் மட்டும் விருந்தில் கலந்து கொண்டது ஏன் என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். விருந்தில் கலந்து கொள்ள செல்வதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த சசி தரூர், எந்த அடிப்படையில் அழைப்புகள் அனுப்பப்பட்டன என்பது தனக்கு தெரியாது என்றும் இதில் தான் நிச்சயமாக பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு சசி தரூர் பேட்டியளித்தார். அப்போது சசி தரூர் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்களையும் தேசிய பணிகளுக்கு ஒவ்வொரு முறையும் அவரை ஒன்றிய அரசு தேர்வு செய்யும் சமயங்களில், காங்கிரசில் கடும் விமர்சனங்கள் எழுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் மிக பெரிய முடிவை(கட்சியில் இருந்து விலகுவது) எடுப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த சசி தரூர், ‘இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்க வேண்டும். மிகுந்த சிரமத்திற்கு பின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். வேறு எந்த முடிவையும் எடுக்க கணிசமான அளவு சிந்தனை மற்றும் பல்வேறு பரிசீலனைகள் தேவைப்படும்’ என்றார்.

Tags : Shashi Tharoor ,Congress ,Russian ,President ,New Delhi ,Senior ,Putin ,Vladimir Putin ,Delhi… ,
× RELATED காஷ்மீரில் கடும் குளிர் அலை: ஷோபியானில் -6.4 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது!