எகோ பசுமை மராத்தான் போட்டி

 

திருப்பூர், டிச. 6: திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா மெடி டிரஸ்ட் சார்பில் எகோ பசுமை மராத்தான் போட்டி நாளை(7-ம் தேதி) நடக்கிறது. இப்போட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை இல்லா தமிழகம் உருவாக்கும் வகையில், திருமுருகன் பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நாளை காலை 6 மணிக்கு நடக்கிறது. இதில், 8 வயது பிரிவில் ஒரு கிலோ மீட்டர், 8 முதல் 11 வயது பிரிவில் 2கி.மீ, 12 முதல் 14 வயது பிரிவில் 3கி.மீ, 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவு, ஆண், பெண் ஓபன் டு ஆல் பிரிவில் 7கி.மீ என போட்டி நடக்கிறது.
சுகன் சுகா மருத்துவமனையில் துவங்கும் போட்டி பெரியாயிபாளையம் ரோட்டில் பரமசிவம்பாளையம் வரை நடக்கிறது. அனைத்து பிரிவுகளிலும் முதல் 5 இடங்களில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Related Stories: