நடுவழியில் பழுதான செங்கோட்டை- கூடலூர் விரைவு பேருந்தால் பயணிகள் அவதி

 

கூடலூர், டிச. 6: செங்கோட்டையில் இருந்து கூடலூர் வரும் அரசு விரைவு பேருந்து நேற்று காலை ஊட்டியை கடந்து கூடலூர் நோக்கி வந்தபோது டிஆர் பஜார் பகுதியில் ஸ்டியரிங் ராடு பழுதடைந்து நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அங்கிருந்து பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறி கூடலூர் வந்தனர். பேருந்து அங்கிருந்து ஊட்டி கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பேருந்து கூடலூர் வராததால் முன்பதிவு செய்த மற்றும் பிற பயணிகள் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வேறு பேருந்துகளில் சென்று செங்கோட்டை செல்லும் பேருந்தில் பயணித்தனர்.

 

Related Stories: