×

உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என இந்தியா – ரஷ்யா இருநாடுகளின் வர்த்தக சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மேலும் இருநாட்டு மக்களின் சுற்றுலா விசாக்களில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

சுற்றுலா நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை. உலகின் திறன் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது; திறன் வாய்ந்த இளைஞர்களை இந்தியா கொண்டுள்ளது. கண்டுபிடிப்புகள், கூட்டு உற்பத்தி, கூட்டு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவுடன் இணைந்து பயணிப்போம்.

பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமன்றி, மக்களின் நலனை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காண வேண்டும்.ரஷ்யாவுடன் தோளோடு தோள் நின்று செல்ல இந்தியா தயாராக உள்ளது” எனவும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Tags : India ,PM ,Narendra Modi ,Delhi ,-Russia trade council ,
× RELATED இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள்...