வாலிபர் போக்‌சோவில் கைது

 

பந்தலூர், டிச. 5: பந்தலூர் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (24). கூலித்தொழிலாளியான இவர், அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: