ஊட்டி கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிப்பு

 

ஊட்டி, டிச.3: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஊதா நிறத்தில் கலெக்டர் அலுவலகம் ஜொலிக்கிறது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை மூன்று நாட்கள் மின் விளக்குகளால் கலெக்டர் அலுவலகம் அலங்கரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: