×

சையத் முஷ்டாக் அலி டி-20: மும்பைக்கு கை கொடுக்கும் ரோகித்

ஆமதாபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 18-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா, சையத் முஷ்டாக் அலி தொடருக்காக மும்பை அணியில் இணைவார் என தெரிகிறது.

Tags : Syed Mushtaq Ali ,T20 ,Rohit ,Mumbai ,Ahmedabad ,18th T20 ,Syed Mushtaq Ali Trophy ,Hyderabad ,Kolkata ,Lucknow ,
× RELATED 100ல் 100 ரன் மிஷின் சாதிப்பாரா?