- தஞ்சாவூர்
- ரயில் நிலையம்
- ரயில்வே பயனர்கள் சங்கம்
- தஞ்சாவூர் இரயில்வே நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் 165ம் ஆண்டு தொடக்க விழாவை பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கொண்டாடினர்.
தமிழகத்தின் மிகப்பழமையான ரயில் நிலையங்களில் தஞ்சாவூர் ரெயில் நிலையமும் ஒன்று. தஞ்சாவூரில் இருந்து நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ரயில் நிலையமாகும்.
தஞ்சாவூர் ரயில் நிலையம் கடந்த 2-12-1861ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரயில் சேவை வழங்கி வருகிறது. நேற்றுடன் ரயில் நிலையம் தொடங்கி 164 ஆண்டுகள் முடிவடைந்து 165ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று காவிரி டெல்டா ரயில் பயணிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் இணைந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
