உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் பவித்ர உற்சவ விழாவில்

பெரணமல்லூர், டிச. 3: பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 30ம் தேதி முதல் பவித்ர உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் சுவாமிகளுக்கு பவித்ர மாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வேதபாராயணம் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழாவின் 3ம் நாளான நேற்று உலகநன்மை வேண்டி யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி அதிகாலை மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து நவகலசங்கள் அமைத்து உலகநன்மை வேண்டி யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது. இந்த வேள்வி பூஜையில் நவதானியங்கள், மூலிகைகள்யிட்டு மகாபூர்ணாஹூதி நடத்தப்பட்டது. மேலும் வேத விற்பன்னர்கள் வேதபாராயணம் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: