மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி ஆரணி அருகே பரபரப்பு நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த

ஆரணி, நவ. 28: ஆரணி அருகே நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மூதாட்டி தனது மகன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்த நிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த கடலை எண்ணெய் மரச்செக்கு கடையில் கூலிவேலை செய்து வரும் கண்ணபிரான்(52) நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆத்திரமடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார்.

இவரது சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின் மகனை கண்டதும் கண்ணபிரான் அங்கிருந்து தப்பி ஓடினார். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூதாட்டி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கண்ணபிரான் மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் தலைமறைவாக இருந்த கண்ணபிரானை நேற்று கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான கண்ணபிரானுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றதும், இரண்டாவதாக ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணபிரானுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில், அவரது 2வது மனைவி பிரிந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: