ஆண்டிபட்டி, டிச. 2: ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் நேற்று கன்னியப்பபிள்ளைபட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களைபறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனர்.
