×

ஜெருசலேம் புனித பயணம் கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல், டிச.2: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவ.1ம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிப்.28ம் தேதிக்குள் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Christians ,Jerusalem ,Dindigul ,Collector ,Saravanan ,Dindigul district ,Tamil Nadu ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...