சத்தியமங்கலம், டிச.2: சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சந்தன மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்தும் கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் புதூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் பொது இடத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை மர்ம கும்பலை சேர்ந்த நபர்கள் வெட்டி எடுத்து சென்றதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
