- பழனி முருகன் கோயில்
- ஈரோடு
- பழனி
- தண்டாயுதபாணி சுவாமி கோயில்
- பஞ்சமிர்தம்
- கவுந்தப்பாடி ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது
- விற்பனை மண்டபம்
- ஈரோடு மாவட்டம்…
ஈரோடு,டிச.1: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,605 மூட்டை நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வார ஏலத்துக்கு முதல் தர சர்க்கடைகள் வரத்து இல்லை. இரண்டாம் தர சர்க்கடை மூட்டைகள் மட்டுமே வந்திருந்தன. 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை,இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,745க்கும், அதிகபட்சமாக ரூ. 2,820-க்கும், சராசரி விலையாக ரூ. 2,760-க்கும் விற்பனையானது. இதில், மொத்தம் 84 ஆயிரத்து 840 கிலோ எடையிலான 1,414 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ. 39 லட்சத்து 5 ஆயிரத்து 805 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பெருந்துறையில் கொப்பரை ஏலம்: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,081 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், முதல் தரக் கொப்பரைகள் 1,553 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 166.65க்கும், அதிகபட்சமாக ரூ. 196.99க்கும் விற்பனையாகின. 2ம் தரக் கொப்பரைகள் 1,528 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 32.95க்கும், அதிகபட்சமாக ரூ. 211.22க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரம் கிலோ எடையிலான கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 2 கோடியே 66 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மைலம்பாடியில் எள் விற்பனை: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 21.69 லட்சத்துக்கு எள் விற்பனையானது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 241 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் ஒரே விலையாக கிலோ ரூ. 148.99க்கு விற்பனையானது. வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 109.27க்கும், அதிகபட்சமாக ரூ. 127.27க்கும், சராசரி விலையாக ரூ. 118.27க்கும் விற்பனையானது.
இந்த ஏலத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 934 கிலோ எடையிலான எள் ரூ. 21 லட்சத்து 69 ஆயிரத்து 641க்கு விற்பனையானதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
