சேலம், டிச.2: சேலம் செவ்வாய்பேட்டையில் பிரசித்தி பெற்ற பாண்டுரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி தினத்தன்று தெப்ப உற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு நேற்று தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு, அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட செயற்கையான குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
