பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

 

கெங்கவல்லி, டிச.1: ஆத்தூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மகன் விஷால் (21), தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த பீர் முகமது மகள் நர்கீஸ்பேகம் (21) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், இருவரும் 2 மாதத்திற்கு முன் மும்பையில் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நர்கீஸ்பேகம் மும்பையில் இருந்து, விஷாலுடன் பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் நகர போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அழகுராணி, இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவர்த்தை நடத்தினார். அப்போது, நர்கீஸ் பேகம் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால், காதல் கணவர் விஷாலுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: