×

கோவில்பட்டி அருகே பைக் கவிழ்ந்து டிரைவர் பலி

 

கோவில்பட்டி, டிச.1: கோவில்பட்டி அருகே சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். வில்பட்டி சீனிவாசன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (58). கார் டிரைவர். இவரது மனைவி கெங்காலட்சுமி (50). சம்பவத்தன்று சங்கரநாராயணன் தனது மனைவியுடன் பைக்கில் கோவில்பட்டி – கடலையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்து ஓடியது. இதில் எதிர்பாராத விதமாக நாய் மீது பைக் மோதி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

Tags : Kovilpatti ,Sankaranarayanan ,Srinivasan Nagar 6th Street, Vilpatti ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...