ஏலகிரிமலை படகு இல்லம் மூடல் சுற்றுலா பயணிகள் இன்றி `வெறிச்’

 

டிட்வா புயல் காரணமாக ஏலகிரிமலையில் உள்ள படகு இல்லம் நேற்று மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு ஒவ்வொரு வாரவிடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். குறிப்பாக ஏலகிரி மலையில் உள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் பொழுதுபோக்குவர். இந்நிலையில் டிட்வா புயல் சின்னம் காரணமாக தமிழக வடமாவட்டங்களில் சாரல் மழை மற்றும் சில இடங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது.

Related Stories: