உதவி கோட்ட பொறியாளரின் காரில் திடீர் தீ குடியாத்தம் நெடுஞ்சாலை துறை

குடியாத்தம், நவ.28: வேலூர் மாவட்டம் குடியாத்தம்- காட்பாடி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலுவலகத்திற்கு வெளியேநிறித்தி வைக்கப்பட்டிருந்த உதவி கோட்ட பொறியாளரின் கார் திடீரென கரு புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கார் முழுவதும் தீ பரவி முழுவதும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அலுவலகத்தில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: