×

கொலை வழக்கில் 3 பேர் கைது

தேனி, டிச.1: போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கராம் மகன் ரமேஷ் (35). கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எஸ்பி சினேகா பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் ரமேஷுக்கும் அவரது தாயார் லோகுமணிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் லோகுமணி தூண்டுதலின் பேரில், அவரது மருமகனான கூடலூரைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் அவரது நண்பர்களான தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த ராமநாதன், போடியை சேர்ந்த பாண்டி (எ) அட்டாக் பாண்டி ஆகியோர் ரமேஷை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வீரபாண்டி போலீசார் நேற்று முன்தினம் செந்தில்குமார், ராமநாதன், பாண்டி (எ) அட்டாக் பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Theni ,Thangaram ,Ramesh ,Kuppinayakkanpatti ,Bodi ,SP ,Sneha Priya ,Lokumani ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...