×

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்கம் டிச.18ல் உண்ணாவிரதம்: மாநில செயற்குழுவில் தீர்மானம்

மதுரை, டிச. 1: மதுரையில் நேற்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுபேசினர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபின் கோரிக்கைகளுக்கான போராட்ட முன்னெடுப்புகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் க.நீதிராஜா நிறைவுரையற்றினார்.

தொடர்ந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபின் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டோர், போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவ பணியாளர்கள், செவிலியர் பணி நிரந்தரம், அனைத்து மருத்துவ பணியாளர்காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.18ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது.

இதனை சென்னையில் நடத்துவதாக தற்போது முடிவு செய்துள்ளோம். தமிழக மருத்துவத்துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுகிறது. எனவே இவற்றில் உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களின் ஊதியம் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவை உள்ளிட்ட எங்கள் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.4ல் ஜாக்டோ – ஜியோ நடத்தும் மறியல் போராட்டத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் முழுமையாக பங்கேற்பர்.

அடுத்ததாக டிச.18ம் தேதி எங்கள் சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம், ஜாக்டோ – ஜியோ சார்பில் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது, இதன் தொடர்ச்சியாக டிச. 27ம் தேதி நடக்கும் போராட்ட ஆயத்த மாநாடு, ஜன.6ல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தம் (எம்ஆர்பி) போன்றவற்றில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் முழுமையாக பங்கேற்கும். இதற்கான தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

Tags : Tamil Nadu Nurses Association ,Madurai ,Tamil Nadu Nurses Development Association ,State vice president ,Sujatha ,District ,Thamaraichelvi ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...