×

மூச்சுத்திணறலால் குழந்தை பரிதாப சாவு

சின்னமனூர், நவ. 29: பெரியகுளம் தாமரைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி சித்திரை செல்வி. இவர்களது குழந்தைகள் ஜீவஸ்ரீ (3), தியாஸ்ரீ. ஏழு மாத குழந்தையான தியாஸ்ரீக்கு அடிக்கடி உடல்நலம் பாதித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை சின்னமனூரில் உள்ள செல்ல கருப்பணசாமி கோயிலுக்கு தூக்கி சென்று கயிறு கட்டியுள்ளனர்.

அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியுள்ளது. இதையடுத்து, ஆட்டோவில் குழந்தையை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்திரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Chinnamanur ,Sonaimuthu ,Thamaraikulam North Street, Periyakulam ,Chithirai Selvi ,Jeevasree ,Thiasree ,Chinnamanur… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...