×

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

புதுக்கோட்டை, நவ.29: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நீதித்துறையில் இ ஃபைலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும்.

இ ஃபைலிங்கை கட்டாயமாக்க கூடாது, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும், வழக்கறிஞர்களின் மாண்பை காத்திட வேண்டும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Pudukkottai Integrated Court ,Pudukkottai ,Pudukkottai District Integrated Court ,Tamil Nadu ,Puducherry Bar Associations ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...