×

மங்களமேடு காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

குன்னம், நவ.29: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளராக நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மங்களமேடு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கமலஹாசன் திருச்சி துவாக்குடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நந்தகுமார் பதவி உயர்வு பெற்று மங்களமேடு காவல் ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

Tags : MANGALAMEDU POLICE STATION ,Kunnam ,Nandakumar ,Perambalur District ,Kamalhasan ,Mangalamedu police ,Trichy Duwakudi Police Station ,Jayangondam Police Station ,Ariyalur District ,
× RELATED சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி