×

ஆலத்தூர் தாலுகாவில் ரேஷன் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்த வட்ட வழங்கல் அலுவலர்

 

ஆலத்தூர், டிச.3: தாயுமானவர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலத்தூர் தாலுகாவில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளை வட்ட வழங்கல் அலுவலர் சசிகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் தாயுமானவர் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி மாதம் தோறும் இந்த ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆலத்தூர் தாலுகாவில் மட்டும் 4,049 பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி நேற்று (2-ம் தேதி) தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவித்திருந்தார்.

Tags : Alathur taluka ,Alathur ,Sasikumar… ,
× RELATED சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி