×

கனமழை எச்சரிக்கை: சீர்காழிக்கு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை

சீர்காழி, நவ.29: சீர்காழியில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் கனமழை பெய்யும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை, ஆவடியில் இருந்து 13 வது பட்டாலியன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தலைமை காவலர் சாமுவேல் தலைமையில் சீர்காழிக்கு 30 பேர் வருகை தந்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்கி உள்ளனர்.

இந்த மீட்பு படையினர் கனமழையால் , இடர்பாடுகளின் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் கருவிகள் அரிவாள், பாறை, சார்ஜர் விளக்குகள், மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ரப்பர் படகு மேலும் அதி நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் என 60 வகையான கருவிகளுடன் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் வருவாய்த் துறையினர் தொடர்பு கொண்டால் அந்த பகுதிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Sirkazhi ,Tamil Nadu ,Mayiladuthurai district ,Titva ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...