×

வேதாரண்யம் பகுதிகளில் விட்டுவிட்டு கன மழை வேதாமிர்த ஏரி நிரம்பியதால் படகு போக்குவரத்து நிறுத்தம்

வேதாரண்யம், நவ.28: வேதாரண்யம் பகுதியில் நேற்று விட்டு விட்டுகாற்றுடன் மழை பெய்தது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் முதல் வேதாரண்யம், தலைஞாயிறு, செம்போடை, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், கோடியக்கரை,கடினல்வயல், தென்னடார், வெள்ளபள்ளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்தது.

வேதாரண்யத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஜராஜன்சோழன் காலத்தில் வெட்டப்பட்ட வேதாமிர்த ஏரி நிரம்பி உள்ளது. இதனால் ஏரியில் இருந்து கடலுக்கு தண்ணீர் செல்லும் சிறிய மதகு கதவை திறந்து தண்ணீரை நகராட்சி நிர்வாகத்தினர் கடலுக்கு வடிய வைத்தனர். மேலும் ஏரியில் நடைபெற்று வந்த படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்த மழையால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர்களுக்கு போதுமான அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்தால் சம்பா சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். அவ்வப்போது மழையும் தரைக்காற்றும் பலமாக வீசி வருவதால் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags : Vedaranyam ,Vedamritha Lake ,Bay of Bengal ,Nagapattinam district ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...