- கோவில்பட்டி
- சக்திவேல்
- சங்கிலி பாண்டி
- கதிர்வேல் நகர், மந்தித்தோப்பு ரோடு, கோவில்பட்டி
- மந்தித்தோப்பு சாலை
- சாஸ்திரி நகர்
கோவில்பட்டி, நவ. 29: கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரை சேர்ந்த சங்கிலி பாண்டி மகன் சக்திவேல் (22), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இரவு மந்தித்தோப்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த சாஸ்திரி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (28) என்பவர் சக்திவேலை மது அருந்த மந்தித்தோப்பு கண்மாய் கரையில் உள்ள ஆலமரத்து பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருந்த மேலும் 4 பேர் மற்றும் முத்துக்காளை ஆகியோர் திடீரென சக்திவேலை சரமாரி தாக்கி அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். கும்பல் தாக்கியதில் காயமடைந்த சக்திவேல், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து முத்துக்காளையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
