×

அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம்

அரியலூர், நவ.28: அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த ஆக்.2ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் அரியலூர் சுகாதார வட்டாரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நாளை (சனிக்கிழமை) பொய்யாதநல்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளிஇம்முகாமானது நடைபெற உள்ளது.

அரியலூர் வட்டார பகுதி சேர்ந்தவர்களுக்கான முகாம் நாளை (சனிக்கிழமை) பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவர்களான எலும்புமுறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்தும் மற்றும் சர்க்கரை நோயியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவர், தோல்நோய் மருத்துவம், இருதயவியல் மருத்துவர், கதிரியியல் மருத்துவர், ஆகியோர் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள்வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Stalin Medical Service Camp ,Poiyathanallur, Ariyalur Block ,Ariyalur ,Stalin Medical Service ,Camp ,Tamil Nadu ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...