- திறனறியும்
- கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி
- கிருஷ்ணராயபுரம்
- திறனறியும் சோதனை
- ராதிகா
- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை…
கிருஷ்ணராயபுரம், நவ. 26: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு பயிற்சியளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் ஊரகத்திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்விற்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு மூலமாக பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியை ராதிகா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், தமிழ் பொன்னி, மணிகண்டன் உடன் இருந்தனர்.
