வேலாயுதம்பாளையம், டிச. 5: கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து வரும் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும். தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், கிழக்கு. தவிட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, பண்டுதகாரன்புதூர், புகளூர்-ராம்நகர், காகிதபுரம், புகளூர்-பம்ப்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
