×

தஞ்சாவூரில் திடீர் கனமழை சாலைகளில் ஓடும் தண்ணீர்

தஞ்சாவூர், அக் 9: தஞ்சாவூர் மாநகரில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சாவூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. அதேபோல் நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சாவூர் மாநகரில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பின்பு மதியம் சுமார் ஒரு மணயளவில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்பு லேசான அளவில் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக கொட்டி தீர்த்து. அதுபோல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆலக்குடி உட்பட பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது.

Tags : Thanjavur ,Old Court Road ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி