அணுசக்தி ஆணைய தலைவர் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: அணுசக்தி ஆணைய தலைவராகவும், அணுசக்தித்துறை செயலாளராகவும் ஒடிசாவை சேர்ந்த அஜித் குமார் மொஹந்தி கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம்வ வரும் அக்டோபர் 10ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் அஜித் குமார் மொஹந்தியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய பணியாளர் அமைச்சகம் நேற்று முன்தினம் வௌியிட்டுள்ள உத்தரவில், “அணுசக்தி ஆணைய தலைவர், அணுசக்தித்துறை செயலாளராக அஜித் குமார் மொஹந்தியின் பதவிக்காலத்தை அக்டோபர் 11 2025 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: