கந்தர்வகோட்டை, ஆக. 22: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திற்கு தினசரி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். பேருந்து நிலையத்தில் மழை காலங்களில் மழைநீர் வெளியே செல்ல பேருந்து நிலைய ஓரத்தில் வடிகால் வாய்க்கால் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கட்டப்பட்டு முழுமை அடையாமல் குறையாக இருப்பதால் இதில் தேங்கிய நீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது.
இதனால் அருகில் உள்ள கடைகளுக்கும் பொது மக்களுக்கும் கொசுகள் மூலம் நோய் பரவும் நிலை உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும், ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
