செய்யாறு, ஆக.14: செய்யாறு அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 7 குட்டிகள் உட்பட 17 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். ஆடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு பிறகு இரவு வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை திடீரென கொட்டகையில் புகுந்த வெறிநாய் ஆடுகளை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில், 7 குட்டி ஆடுகள் உள்பட 17 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தும் நிலையில் ஆடுகள் பலியான சம்பவம் சேகர் குடும்பத்தை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடைத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர்.
