- வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை
- வந்தவாசி
- வந்தவாசி-காஞ்சிபுரம்
- தமிழீழத் தலைவன்
- மங்கல் சிப்காட்
- பெருநகர்…
வந்தவாசி, ஆக. 13: வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக இருந்ததை தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாடு திட்டம் மூலமாக நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக மாங்கால் சிப்காட்டில் இருந்து பெருநகர் வரையில் 9 கிலோமீட்டர் தூரம் ரூ.72.80 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று திருவண்ணாமலை வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு விதித்துள்ள காலகெடுவுக்கு முன்பாகவே நான்கு வழிச்சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் சாலை இருபுறங்களிலும் மழைநீர் செல்லும் வகையில் நீர் பாதை ஏற்படுத்த வேண்டும் என செய்யாறு கோட்டை பொறியாளர் சந்திரனுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவிக்கோட்டப்பொறியாளர்கள் இன்பநாதன், ராஜேந்திரன் உடனிருந்தனர்.
