தைப்பொங்கல் நாட்களில் யுஜிசி-நெட் தேர்வு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நமது கலாச்சாரத்தை ஒருசேர கற்பிக்கும் இடம் காஞ்சிபுரம்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதி மாற்ற வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு எம்பி கடிதம்
விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு: அரசியல், சட்டப்போராட்டம் நடத்தப்படும்
ரூ.1,500 கோடி முதலீடு, 25,000 பேருக்கு வேலை : ராணிப்பேட்டையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மோசடி வழக்கில் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட் சம்மன்
மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்கள் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது : புதிய நிபந்தனைகள் வெளியீடு!!
காளையார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்
சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.
புழல் பகுதியில் தெரு, சாலையோரம் திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒன்றிய அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம்
தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியீடு
குறுங்காடுகள் திட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
கிசான் நிதியை ரூ.12,000ஆக உயர்த்தி தரக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு!!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்