×

10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன தீர்மானம் முன்மொழியப்பட்டது. விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாம் என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. விமான நிலையம் அமைந்தால் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று நாகை மாலி கூறியுள்ளார். விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று ஜி.கே.மணி கேள்விகள் எழுப்பினர்.

சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது, தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செயவதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். புதிய விமான நிலையம் அமைப்பதால் புதிய வழித்தடங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ தள்ளி வருவதற்கு காரணம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் விமான நிலையங்கள் நகரங்களில் இருந்து தொலைவில் தான் இருக்கின்றது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் விளைநிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 11 இடங்களை ஆய்வு செய்த பிறகே பரிந்துரை தேர்வு செய்தோம். பரந்தூரில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டே அங்கு புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளனர்.

13 கிராம மக்களின் கருத்துக்கள்  குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவு அளித்துள்ளார்.  சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.


Tags : Bharandur Airport ,Minister , 10 crore passengers, Parantur airport, to be set up, Parliament, Minister Thangam South, explanation
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...