×

கொள்ளிடம் அருகே புதர்மண்டி கிடக்கும் ஆலாலசுந்தரம் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே புதர்மண்டி கிடக்கும் ஆலாலசுந்தரம் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் வழியே சென்று பண்ணங்குடி, கற்பள்ளம், ஆலாலசுந்தரம், நல்லூர், பாவட்டமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரும் வாய்க்கால் ஆலசுந்தரம் வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் சென்ற வருடம் தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது இந்த வாய்க்காலில் புதர் மற்றும் கருவேல முள் செடிகளும் வளர்ந்து வாய்க்காலை அடைத்துக் கொண்டுள்ளது.

கடைமடை பகுதிக்கு சில தினங்களில் தண்ணீர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வாய்க்காலை ஆழ்படுத்தி தூர்வாரினால் வயல்களுக்கு தண்ணீர் எளிதில் சென்றடையும். கொள்ளிடம் பகுதியில் உள்ள பிரதான பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், ஆலாலசுந்தரம் பாசன கிளை வாய்க்காலையும் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Alalasundaram ,Kollidum , Kollidam: Farmers have demanded that the Alalasundaram irrigation canal near Kollidam should be dug.
× RELATED ஆச்சாள்புரம்- மாதானம் சாலையில்...